மும்பை தாக்குதலின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

 

மும்பை தாக்குதலின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

உலகையே உலுக்கிய மும்பை தாக்குதலின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

டெல்லி: உலகையே உலுக்கிய மும்பை தாக்குதலின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியன்று மும்பையின் பிரபல தாஜ் ஓட்டல் உள்பட மும்பையின் பல்வேறு முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினார்கள். சுமார் 8 இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 9 பேர், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் எனும் தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். விசாரணைக்கு பின்னர், அவரும் தூக்கிலிடப்பட்டார்.

உலகையே உலுக்கிய இந்த தாக்குதலின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Tributes to those who lost their lives in the gruesome 26/11 terror attacks in Mumbai.

Our solidarity with the bereaved families.

A grateful nation bows to our brave police and security forces who valiantly fought the terrorists during the Mumbai attacks.

— Narendra Modi (@narendramodi) November 26, 2018

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் எனது அஞ்சலி. இதில் உயிர் தியாகம் செய்த நமது வீரர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். மும்பை தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட நமது துணிச்சலான போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தேசம் தலைவணங்குகிறது என்று பதிவிட்டுள்ளார்.