மும்பை – சிங்கப்பூர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குழந்தை உள்பட இருவரிடம் விசாரணை!

 

மும்பை – சிங்கப்பூர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குழந்தை உள்பட இருவரிடம் விசாரணை!

சிங்கப்பூர் விமானப் படையின் உதவியுடன் பாதுகாப்பாக அந்நாட்டின் சாங்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது

சிங்கப்பூர்: மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பெண் ஒருவர் மற்றும் ஒரு குழந்தையிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு 11.35 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமாக SQ 423 ரக விமானம் புறப்பட்டு சென்றது. 263 பயணிகளுடன் அந்த விமானம் புறப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.

singapore airlines

இதையடுத்து, சிங்கப்பூர் விமானப் படையின் உதவியுடன் பாதுகாப்பாக அந்நாட்டின் சாங்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தியே என தெரியவந்துள்ளது.

இதனிடையே, தீவிர சோதனைக்கு பின்னர் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்ட போதும், பெண் ஒருவர் மற்றும் ஒரு குழந்தையிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

changi airport

மும்பையில் இருந்து சிங்கப்பூர் வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை உறுதிபடுத்தியுள்ள அந்த விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், விமானம் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு தரையிறங்கியதாகவும், மிரட்டல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதவிர கூடுதல் தகவல்களை தற்போதைக்கு தெரிவிக்க இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

கை,கால் நல்ல தானே இருக்கு: விஜய் பட நடிகையை விளாசிய பிரபல நடிகர்!