மும்பையை வீழ்த்த இதை செய்யுங்கள்; சென்னை அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் ஜாம்பவான் !!

 

மும்பையை வீழ்த்த இதை செய்யுங்கள்; சென்னை அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் ஜாம்பவான் !!

டூவைன் பிராவோவை முன்னதாக களமிறக்கினால் சென்னை அணியின் பேட்டிங் பிரச்சனை சரியாகும் என முன்னாள் வீரர் வி.வி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். 

டூவைன் பிராவோவை முன்னதாக களமிறக்கினால் சென்னை அணியின் பேட்டிங் பிரச்சனை சரியாகும் என முன்னாள் வீரர் வி.வி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். 

bravo

கடந்த மாதம் துவங்கிய ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் நாளையுடன் நிறைவடைகிறது. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் ஐ.பி.எல் தொடரில் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோதுகின்றன. 
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துகளையும், கணிப்புகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 

csk vs mi

அந்த வகையில் இறுதி போட்டி குறித்து பேசியுள்ள கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானும், விண்டீஸ் அணியின் முன்னாள் வீரருமானவி. வி ரிச்சர்ட்ஸ், டூவைன் பிராவோவை முன்னதாக களமிறக்கினால் சென்னை அணிக்கு பேட்டிங்கில் கூடுதல் பலம் கிடைக்கும் என அட்வைஸ் கொடுத்துள்ளார். 
இது குறித்து பேசிய அவர்; பிராவோ மாதிரியான எனர்ஜிடிக்கான வீரரை முன்வரிசையில் இறக்க வேண்டும், பிராவோ போன்ற அதிரடி வீரர்களின் ஆட்டம் நிச்சயம் சென்னை அணிக்கு மிகப்பெரும் பலத்தை கொடுக்கும், சென்னை அணியின் பேட்டிங் பிரச்சனையும் சரியாகும் என்றார்.