மும்பையில் முடங்கியது மீடியா….  நாளிதழ்கள் அச்சிடும் பணி நிறுத்தம்! 

 

மும்பையில் முடங்கியது மீடியா….  நாளிதழ்கள் அச்சிடும் பணி நிறுத்தம்! 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

Newspapers

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் 106 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா அச்சம் காரணமாக மும்பையில், நாளிதழ்கள் அச்சிடும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டு, ஏப்ரல் 1 ம் தேதிக்கு பிறகே இனி பத்திரிகைகள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.