மும்பையில் ஓடும் ரயிலில் டிக் டாக் வீடியோ எடுத்த சிறுவன் உள்பட 2 பேர் கைது

 

மும்பையில் ஓடும் ரயிலில் டிக் டாக் வீடியோ எடுத்த சிறுவன் உள்பட 2 பேர் கைது

மும்பையில் ஓடும் ரயிலில் சண்டை போடுவது போன்ற டிக் டாக் வீடியோ எடுத்த சிறுவன் உள்பட 2 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

இளம் தலைமுறையினர் மட்டுமில்லாது நடுத்தர வயதினரிடமும் டிக் டாக் செயலி பிரபலம். அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஓரே ஒரு வீடியோ போட்டாலே போதும் ஒரே இரவில் நாம் உலக பேமஸ் ஆகி விடலாம். டிக் டாக் வாயிலாக கிடைத்த புகழ்தான் ஒருவருக்கு அரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது என்றால் அதன் வீரியத்தை புரிந்து கொள்ளுங்கள். இதனால் விதவிதமாக மற்றும் வித்தியாசமாக டிக் டாக் வீடியோக்களை உருவாக்குவதில் இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ரயில்

சமீபத்தில் மும்பை லோக்கல் ரயிலில் 2 நண்பர்கள் சண்டை போடுவது போல் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த வாதாலா அரசு ரயில்வே போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் சிறுவன். கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் அவர்கள் இருவரும் 2 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

டிக் டாக்

சமீபகாலமாக ஓடும் ரயில்களில் சண்டை போடுவது போல் வீடியோ எடுத்து டிக் டாக்கில் போடுவதில் இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அது தவறு என்பதும், விபரீதமானது என்பதையும் அவர்கள் உணரவில்லை. சிலர் ரயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் நின்று டிக் டாக் வீடியோ எடுக்கும் போது தங்களது உயிரை மாய்த்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது.