மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு புல்லட் ரயிலில் செல்ல ரூ.3 ஆயிரம்தான்…..

 

மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு புல்லட் ரயிலில் செல்ல ரூ.3 ஆயிரம்தான்…..

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும் போது பயண கட்டணம் ரூ.3 ஆயிரம் என்ற அளவில் இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகாராஷ்ரா மாநிலம் மும்பை முதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் வரை 508 கி.மீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் விட மத்திய அரசு முடிவு செய்தது. 2023 டிசம்பருக்குள் இந்த திட்டத்தை முடிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய அதி வேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்.) தொடங்கப்பட்டது. தற்போது புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

என்.எச்.எஸ். ஆர்.சி.எல்.

இந்நிலையில், மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக, என்.எச்.எஸ்.ஆர்.சி.எல். நிர்வாக இயக்குனர் அச்சால் கரே கூறியதாவது: மும்பை-அகமதாபாத்  புல்லட் ரயில் பாதைக்காக ஒட்டு மொத்தத்தில் 1,380 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதுவரை நாங்கள் 662 ஹெக்டேர் (45 சதவீதம்) நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்துக்கான காலக்கெடுவை (2023 டிசம்பர்) மனதில் வைத்து பணிபுரிந்து வருகிறோம்.

2020 மார்ச் மாதத்துக்குள் கட்டுமான பணிகள் தொடங்கி விடும். இந்த திட்டம் முழுவதையும் மொத்த ரூ.1.08 லட்சம் கோடி செலவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவடைந்த பிறகு, காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டு பக்கமும்  தலா 35 வீதம் மொத்தம் 70 டிரிப்புகள் புல்லட் ரயில் இயக்கப்படும். டிக்கெட் கட்டணம் சுமார் ரூ.3 ஆயிரம் என்ற அளவில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்