மும்பையிடம் மீண்டும் வீழ்ந்த சென்னை அணி; கொல வெறியில் சென்னை ரசிகர்கள் !! 

 

மும்பையிடம் மீண்டும் வீழ்ந்த சென்னை அணி; கொல வெறியில் சென்னை ரசிகர்கள் !! 

ஐ.பி.எல் டி.20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் படுதோல்வி அடைந்துள்ளது சென்னை ரசிகர்கள் மத்தியிலேயே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் படுதோல்வி அடைந்துள்ளது சென்னை ரசிகர்கள் மத்தியிலேயே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

csk vs mi

நடப்பு ஐ.பி எல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான குவாலிபையர் போட்டி நேற்று நடைபெற்றது.

dhoni

இது அன்புவின் கோட்டை (Anduden) என்று சென்னை ரசிகர்களால் போற்றப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கம் போல் முதல் நான்கு முக்கிய வீரர்கள் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறவே, பின்வரிசையில் வந்த அம்பத்தி ராயூடு 42 ரன்களும், தோனி 37 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 131 ரன்கள் எடுத்தது. 

csk vs mi

இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா 4 ரன்களிலும், டி. காக் 8 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும் அடுதடுத்து களமிறங்கிய இஷான் கிஷான் 28 ரன்களும், கொடுத்த கேட்ச்சை எல்லாம் சென்னை வீரர்கள் கோட்டை விட்டதால் கடைசி வரை ஆட்டமிழக்காத சூர்யகுமார் யாதவ் 71 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 18.3 ஓவரிலேயே இலக்கை அடைந்த மும்பை அணி சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கும் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு தொடரில் மும்பை அணியிடம் மூன்றாவது முறையாக படுதோல்வி அடைந்துள்ளது சென்னை ரசிகர்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தோனி, இம்ரான் தாஹிர் போன்ற ஒரு சில வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களையும் சென்னை ரசிகர்களே சமூக வலைதளங்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.