முன்விரோதத்தால் இளைஞர் குத்திக்கொலை.. ஊரடங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

 

முன்விரோதத்தால் இளைஞர் குத்திக்கொலை.. ஊரடங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சென்னை பள்ளிக்கரணையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14 ஆம் தேதி வரையிலே ஊரடங்கு இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக கொரோனா குறைந்ததோ இல்லையோ.. குடும்ப சண்டைகளும் கொலைகளும் அதிகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தில் ஒரு ஏரி உள்ளது. அந்த ஏரியின் அருகே அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில், நேற்று இரவு கிரி(24) என்ற இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. அவரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து  விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், கிரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

கொலை நடந்த இடத்தில் அரிவாள் ஒன்று கிடந்துள்ளது. அதில் கிடைத்த கைரேகை மூலம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த கிரியின் தம்பிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் தம்பிக்கும் சண்டை ஏற்பட்டதால், அந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை அமைத்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.