முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

 

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.

67 வயதான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்று ஹர்ஷ வர்தன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

கடந்த பாஜக ஆட்சியின் போது  மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ்.  உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த மசோதாவிற்கு கூட தைரியமான முடிவு என நேற்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.