முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

 

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.

டெல்லி: முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். வயது முதிர்வு காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். மேலும், உடல்நலக்குறைவாலும் அவர் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.