முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்து மோடி ட்வீட்..

 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்து மோடி ட்வீட்..

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்  மன் மோகன் சிங்குக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இந்தியாவின் பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங். 2004 முதல் 2014 வரை பிரதமராக பதவி வகித்த  மன்மோகன் சிங், இன்று தனது 87 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு, பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

 

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்  மன் மோகன் சிங்குக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், ‘நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.