முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எம்.பி பதவி! 

 

முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எம்.பி பதவி! 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ரஞ்சன் கோகாய், அசாமில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், 2001-ஆம் ஆண்டு கவுஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியானார். கடந்த 2012-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 6 ஆண்டுகளுக்குப் பின் 2018 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இவர் கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெற்றார். 

 Ranjan Gogoi

இந்நிலையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியவருமான ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.