முன்னாள் தலைமை நீதிபதியிடம் ஒரு லட்சம் ஆட்டையை போட்ட ஹேக்கர்கள்!

 

முன்னாள் தலைமை நீதிபதியிடம் ஒரு லட்சம் ஆட்டையை போட்ட ஹேக்கர்கள்!

இது நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, நீதிபதி சிங் பேச்சுவாக்கில் லோதாவிடம், “என்னுடைய இமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது, உறவினருக்கு உடல்நிலை சரியில்லை அவசரமாக பணம் தேவை என நான் அனுப்பியதாக நிறைய பேருக்கு இமெயில் சென்றிருக்கிறது” என சொல்லப்போக, உடனே நீதிபதி லோதா “அட, நீங்க கேட்டீங்கன்னு நான்கூட ஒரு லட்சம் அனுப்பி இருந்தேனே” என சொல்லிவிட்டு முழித்திருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு உச்ச நீதிமன்ற  முன்னாள் தலைமை நீதிபதி லோதாவிற்கு உடன் பணிபுரிந்த நீதிபதி சிங்கிடம் இருந்து ஒரு இமெயில் வருகிறது. கேன்சர் சிகிச்சைக்காக நெருங்கிய உறவினரை மருத்துவமனையில் அவசரமாக அனுமதித்து இருப்பதாகவும், சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவருக்கு ஒரு லட்சம் கட்டணம் செலுத்த தேவைப்படுவதாகவும், தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாது, உதவ முடியுமானால் உடனடியாக இந்த இமெயிலுக்கே பதில் தரும்படியும், அதன்பின் மருத்துவரின் அக்கவுன்ட் நம்பரை அனுப்புவதாகவும் ‘அவசர உதவி’ என்ற பெயரில் இமெயில் வருகிறது.

Hacker

விடியற்காலை நான்கு மணியளவில் எதேச்சையாக தூக்கத்தில் இருந்து எழுந்து  போனை பார்க்க, மற்றொரு நீதிபதியிடம் இருந்து அவசர உதவிகோரி வந்த இமெயிலை பார்க்கிறார். அடடா, இந்த அர்த்த ராத்திரியில் உதவிக்கு எங்கேப்போவார் என்று நினைத்த நீதிபதி லோதா, உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை குறிப்பிட்ட கணக்கிற்கு இரண்டு தவணைகளில் அனுப்பியிருக்கிறார்.

இது நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, நீதிபதி சிங் பேச்சுவாக்கில் லோதாவிடம், “என்னுடைய இமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது, உறவினருக்கு உடல்நிலை சரியில்லை அவசரமாக பணம் தேவை என நான் அனுப்பியதாக நிறைய பேருக்கு இமெயில் சென்றிருக்கிறது” என சொல்லப்போக, உடனே நீதிபதி லோதா “அட, நீங்க கேட்டீங்கன்னு நான்கூட ஒரு லட்சம் அனுப்பி இருந்தேனே” என சொல்லிவிட்டு முழித்திருக்கிறார். அடுத்து என்ன? காவல்துறையிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது!