முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக பாலிவுட்டில் கால் பதிக்கும் ஜீவா..!

 

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக பாலிவுட்டில் கால் பதிக்கும் ஜீவா..!

பாலிவுட்டில் உருவாகும் ’83’ படத்தில் தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்க இருக்கிறார். 

சென்னை: பாலிவுட்டில் உருவாகும் ’83’ படத்தில் தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்க இருக்கிறார். 

1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது. கபில் தேவ் கேப்டனாக இருந்த அந்த அணியில், தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் இடம்பெற்றிருந்தார். 

world cup

உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை மையமாக வைத்து, உருவாகிவரும் ‘83’ என்ற படத்தை கபீர் கான் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கேப்டனாக இருந்த கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங்கும், தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். 

ranveer

இதுகுறித்து நடிகர் ஜீவா கூறுகையில், தற்போது ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், முதன் முதலாக இந்தியில் ‘83’ படத்தில் அறிமுகமாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழக கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய ஜீவா, லகான் , எம்.எஸ்.தோனி படங்களின் வரிசையில் ‘1983 வேர்ல்ட் கப்’ படமும் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.