முன்னாள் கணவரின் குழந்தையை வாழ்த்திய பிக் பாஸ் பிரபலம்!! 

 

முன்னாள் கணவரின் குழந்தையை வாழ்த்திய பிக் பாஸ் பிரபலம்!! 

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் தனது முன்னாள் கணவர் சாண்டியின் குழந்தையை வாழ்த்தியுள்ளார்

சென்னை: நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் தனது முன்னாள் கணவர் சாண்டியின் குழந்தையை வாழ்த்தியுள்ளார். 

பிரபல தனியார் தொலைகாட்சி மூலம், தொகுப்பாளினியாக அனைவராலும் அறியப்பட்டவர் காஜல். சின்னதிரையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால், சீரியல்,மற்றும் திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். மேலும் ஒரு சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சில விமர்சனங்களைச் சந்தித்தார். பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் எந்த எதிர்மறையான விமர்சனங்களையும் சந்திக்காமல் வெளியேறினார். 

இவரும் பிரபல நடன இயக்குநர் சாண்டியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தங்களுடைய திருமண வாழ்க்கையை விவாகரத்து செய்து கொண்டனர்.காஜலை பிரிந்ததும் சாண்டி,தன்னுடைய தீவிர ரசிகை சில்வியா என்பவரைக் காதலித்து 2017ம் திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சாண்டியின் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் காஜல் அமர்ந்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது, சாண்டி மற்றும் சில்வியா இருவரும் தங்களுடைய மகளை பார்க்க தனக்கு அழைப்பு விடுத்தால், அதனை ஏற்று கொண்டு சந்தித்தாக தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு தன்னுடைய வாழ்த்தையும் அதில் பதிவிட்டுள்ளார்.