முன்னாள் உ.பி முதல்வர் என்.டி.திவாரி காலமானார்

 

முன்னாள் உ.பி முதல்வர் என்.டி.திவாரி காலமானார்

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார்.

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.டி.திவாரி, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் என இரு மாநிலங்களுக்கு முதல்வராக இருந்தவர்.

நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த திவாரி கடந்த  சில நாட்களாக டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 93 வயதாகும் திவாரி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், 3 முறை உத்தரப் பிரதேச முதல்வராகவும், ஒருமுறை உத்தராகண்ட் முதல்வராகவும் அவர் பதவி வகித்துள்ளார். தீவிர அரசியலை விட்டு விலகிய பின்னர், கடந்த 2007ம் ஆண்டு ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பிறந்தநாள் அன்றே மறைந்த என்.டி.திஆரியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்.