முன்னால் காஷ்மீர் முதல்வர்களுக்கு சிறையில் 7 ஸ்டார் வசதிகள் – காஷ்மீர் பாஜக

 

முன்னால் காஷ்மீர் முதல்வர்களுக்கு சிறையில் 7 ஸ்டார் வசதிகள் – காஷ்மீர் பாஜக

வெளியே விட்டா போராட்டம் பண்ணாமல் போகியா கொண்டாடுவார்கள்? சரி, எவ்வளவு நாளைக்கு அவர்களை கைது செய்தே வைத்திருக்கப்போகிறது அரசு? பத்து வருடங்கள் கழித்து வெளியேவிட்டாலும், அவர்கள் வந்து பேசப்போவது காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை வலியுறுத்தித்தான்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் மாநில உரிமை பறிக்கப்பட்டதால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி முன்னாள் முதல்வர்களான மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா மற்றும் அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா ஆகியோர் முதலில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். காஷ்மீரின் இரு வலிமை வாய்ந்த தலைவர்கள் சுதந்திரமாக வெளியில் இருந்தால், ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபடகூடும் என்றும், அதனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பிரச்னை ஏற்படும் என அஞ்சும் மத்திய அரசு, அவர்களை வீட்டுச் சிறையிலிருந்து மாற்றி அரசு விருந்தினர் மாளிகையில் காவலில் வைத்துள்ளது.

Hari Niwas palace

கைதாகிதான் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் சிறையில் செக்கிழுக்கவில்லை, மாறாக 7 ஸ்டார் வசதிகளை அனுபவத்து கொண்டிருக்கிறார்கள் என காஷ்மீர் பாஜக தலைவர் கைது நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். வெளியே விட்டா போராட்டம் பண்ணாமல் போகியா கொண்டாடுவார்கள்? சரி, எவ்வளவு நாளைக்கு அவர்களை கைது செய்தே வைத்திருக்கப்போகிறது அரசு? பத்து வருடங்கள் கழித்து வெளியேவிட்டாலும், அவர்கள் வந்து பேசப்போவது காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை வலியுறுத்தித்தான். யாரிடமும் கலந்தாலோசிக்காமல் பணமதிப்பழிப்புக்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பாக ரிசர்வ் வங்கியிடம் விஷயத்தை சொல்லி கையைச் சுட்டுக்கொண்டது முந்தைய அரசின் ஆறாத வடு. அது பரவாயில்ல, பொருளாதாரம், பணம் போனால் சம்பாதித்துக்கொள்ளலாம். காஷ்மீர் விவகாரம், டீமானிட்டைசேஷன் 2.0வாக மாறாமல் இருந்தால் சரி!