முத்தையா முரளிதரன் விமானநிலையத்தில் செய்த செயல்… பாராட்டும் இலங்கை மக்கள்!

 

முத்தையா முரளிதரன் விமானநிலையத்தில் செய்த செயல்… பாராட்டும் இலங்கை மக்கள்!

முத்தையா முரளிதரன், கொழும்பு விமானநிலையத்தில் குடிவரவு கவுண்டரில் வரிசையில் நிற்காமல் செல்லலாம் என்று பயணிகள் அன்புடன் கூறிய நிலையில் அதை மறுத்து மக்களுடன் மக்களாக வரிசையில் நின்றதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

முத்தையா முரளிதரன், கொழும்பு விமானநிலையத்தில் குடிவரவு கவுண்டரில் வரிசையில் நிற்காமல் செல்லலாம் என்று பயணிகள் அன்புடன் கூறிய நிலையில் அதை மறுத்து மக்களுடன் மக்களாக வரிசையில் நின்றதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களுள் ஒருவர் முத்தையா முரளிதரன். உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பப்படும் பிரபலம். இந்தியாவிலிருந்து இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு முத்தையா முரளிதரன் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்றார். விமானம் நள்ளிரவில் கொழும்பு நகரை அடைந்தது. அனைவரும் குடிவரவு கவுண்டரில் பரிசோதனைக்காக நின்றனர். அப்போது, முத்தையா முரளிதரன் தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் வரிசையில் நின்றார். இதனால், பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மேலும், வரிசையில் நிற்காமல் முன்னே செல்லும்படியும் கேட்டுக் கொண்டனர். ஆனால், அன்புடன் அவர் மறுத்துவிட்டார்.

muttiah-muralitharan

இதைத் தொடர்ந்து விமானநிலைய ஊழியர்கள் வந்து, அவரையும் அவரது குடும்பத்தினரையும் வரிசையில் நிற்காமல் நேராக வந்து பரிசோதனையை முடித்துவிட்டு கிளம்பும்படி கூறினர். ஆனால், அதையும் முத்தையா முரளிதரன் ஏற்கவில்லை.
இது குறித்து முத்தையா முரளிதரனின் மனைவி மதிமலர் கூறுகையில், “இந்தியாவிலிருந்து நாங்கள் வந்த விமானம் இரவில் தரையிறங்கியது. நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் இருந்தோம். விமானநிலையமே பரபரப்பாக இருந்தது. அந்த நேரத்தில் வரிசையில் நிற்க வேண்டாம் என்று அதிகாரிகள் கூறினார்கள். இலங்கை மக்கள் முத்தையா முரளிதரனை நேசிக்கிறார்கள். மதிக்கிறார்கள். அந்த மரியாதையின் அடையாளமாக எங்களை வரிசையில் நிற்க வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கூறுகிறார்கள். அவர்களை நாங்களும் நேசிக்கிறோம். அவர்களுக்கு மரியாதை அளிப்பதால் வரிசையைவிட்டு வெளியேறி முன்னே செல்லவில்லை” என்றார்.

muttiah-muralitharan-01

முத்தையா முரளிதரனின் இந்த செயலுக்கு இலங்கை மக்கள் பாராட்டும், வாழ்த்தும் கூறிவருகின்றனர். முத்தையா முரளிதரன் குடும்பத்தினருடன் வரிசையில் நின்ற காட்சி மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.