முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழா: பலத்த போலீஸ் பாதுகாப்பு

 

முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழா: பலத்த போலீஸ் பாதுகாப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெறுகிறது

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெறுகிறது.

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது  குருபூஜை விழா கடந்த 28-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இறுதி நாளான இன்று 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் சமூதாய தலைவர்கள் பொது மக்கள் உள்ளிடோர் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு நேரில் வந்து இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதையொட்டி, பசும்பொன், கமுதி, அபிராமம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக போலீசார் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், ஆளில்லா விமானம் மூலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.