முத்தலாக் மசோதா: நீண்ட விவாதத்திற்குப் பின் மக்களவையில் நிறைவேற்றம்

 

முத்தலாக் மசோதா: நீண்ட விவாதத்திற்குப் பின் மக்களவையில் நிறைவேற்றம்

பாராளுமன்றத்தில் நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர், முத்தலாக் மசோத நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர், முத்தலாக் மசோத நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் முத்தலாக் சட்ட மசோதா, கடந்த கூட்டத் தொடரின் போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு போதுமான பெரும்பான்மை பாஜக அரசுக்கு இல்லை. மத நம்பிக்கைகள் சார்ந்த விஷயம் என்பதால், இந்த மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

எனவே, அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவுக்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியது. அதன் தொடர்ச்சியாக, இந்த மசோதாவை அவசர சட்டமாக நிறைவேற்ற குடியரசுத் தலைவரிடம் மத்திய ஒப்புதல் கோரியது. அவரும் ஒப்புதல் வழங்கினார்.

அதனையடுத்து, இந்த மசோதா மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் முத்தலாக் மசோதாவில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர வற்புறுத்தின. ஆனால் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது.

இதனால், விவாதம் முடிந்தவுடன் சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டார். வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது. அதன்பின், நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 245 பேர் வாக்களித்தனர். 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். மசோதாவை நிறைவேற்ற போதுமான வாக்குகள் கிடைத்ததையடுத்து, வெற்றிகரமாக முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.