முத்தலாக் மசோதா: என்ன சொல்கிறார் நடிகர் ராஜ்கிரண்?

 

முத்தலாக் மசோதா: என்ன சொல்கிறார் நடிகர் ராஜ்கிரண்?

‘முத்தலாக்’ சட்டம் இந்திய அரசியல் சாசனத்தையும், இந்திய இறையாண்மையையும் கேலிக்கூத்தாக்குவதாக நடிகர் ராஜ்கிரண் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை:முத்தலாக்’ சட்டம் இந்திய அரசியல் சாசனத்தையும், இந்திய இறையாண்மையையும் கேலிக்கூத்தாக்குவதாக நடிகர் ராஜ்கிரண் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடுப்பு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து இன்று மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால், இம்மசோதாவில் சில திருத்தம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

tripletalaq

இந்நிலையில், பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் முத்தலாக் சட்டம் குறித்த விளக்கத்தை நடிகர் ராஜ்கிரண் பகிர்ந்துக் கொண்டுள்ளார். ’தலாக்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘விவாகரத்து’ என அர்த்தம். மூன்று முறை தலாக் கூறி பிரிவது இஸ்லாமிய மார்க்கத்தில் சட்டமாக உள்ளது. இது பெண்ணுரிமையை பேணும் உலகளாவிய சட்டங்களில் ஒன்றாக உள்ளது.

இஸ்லாமிய ஆண், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாமல் விவாகரத்து செய்ய, ’உங்களுடனான திருமண பந்தத்தை இன்றுடன் முடித்துக் கொள்கிறேன்’ என்பதை தெரியப்படுத்த வேண்டும். உடனே இந்த விவாகம் ரத்தாகாது. கணவன் தலாக் கூறியதும் பெண் அது குறித்து நன்கு ஆலோசித்து முடிவெடுக்க கால அவகாசம் கொடுக்கப்படும். அந்த நேரத்தில் இருவீட்டாரும் கணவன் – மனைவியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இது போல் 3 முறை நடக்கும். மூன்றாவது முறையும் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால், அவர்களது விவாகம் ரத்தானதாக அறிவிக்கப்படும். இது இஸ்லாமிய ஆண்களுக்கான நடைமுறை.

tripletalaq

பெண்களுக்கு, இன்னும் சில சிறப்புச் சலுகையாக தனது கணவரோடு சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றால், காலக்கெடு கொடுத்து காத்துக்கிடக்க தேவையில்லை. ‘குலா’ முறையில் உடனடியாக கணவனை விவகாரத்து செய்துவிடலாம். இஸ்லாத்தில் பெண்களின் உணவுகளுக்கும், உரிமைக்கும் அதிக மதிப்பளிக்கப்படுகிறது.

பொது சிவில் சட்டப்படி, கணவனோ, மனைவியோ விவாகரத்து செய்ய வேண்டுமெனில், ஆண்டுக்கணக்காக நீதிமன்றத்திற்கு அலைந்தும், வக்கீலுக்கு பணத்தை செலவழித்து, நிம்மதி துலைத்து விவாகரத்து பெறுபவர்களும் உண்டு, வயதாகி விவாகரத்து ஆகாதவர்களும் உள்ளனர்.

tripletalaq

இது இஸ்லாமிய நடைமுறையில் ‘ஷரீயத்’ சட்டம் என கூறப்படுகிறது. இதனை இந்திய அரசியல் சாசன சட்டம் உறுதி செய்துள்ளது. இஸ்லாமிய மார்க்கம் பற்றியோ, ஷரீயத் சட்டத்தை பற்றியோ எவ்வித புரிதலும் இல்லாத குறிப்பிட்ட மத சார்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுக் கூடி, அரசியல் சாசன சட்ட அமர்வுக்கு கொண்டு செல்லாமலே, இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யலாம் என்ற போக்கில் செயல்படுகின்றனர்.

அப்படி, குறுக்கு வழியில் ’முத்தலாக் தடைச்சட்டம்’ நிறைவேற்றியிருப்பது இந்திய அரசியல் சாசனத்தையும், இந்திய இறையாண்மையையும் கேலிக்கூத்தாக்கியிருப்பதாக நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்