முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றம்! என்ன சொல்கிறது இந்த மசோதா?

முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றம்! என்ன சொல்கிறது இந்த மசோதா?

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது.முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

முத்தலாக் மசோதாவின் முக்கிய அம்சங்கள்! 

இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலே முத்தலாக் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் எனக்கூறி விவாகரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றம் என முத்தலாக் மசோதா கூறுகிறது. அதாவது எழுத்து  மூலமாகவோ, அல்லது முன்னணு தகவல்தொடர்பு மூலமாகவோ முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றாலும் தண்டனைக்குரிய குற்றமாகவே இதில் பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் இஸ்லாமிய பெண்கள் விவாகரத்தே பெறக்கூடாதா என்ற கேள்வி எழலாம்… இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்ய வேண்டும் என்பதையே இந்த மசோதா எடுத்துறைக்கிறது. 

முத்தாக் மூலம் விவாகரத்து செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கூறுகிறது முத்தலாக். இதன்படி கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாது. முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். முத்தலாக் வழக்கின்போது கணவன், மனைவி இடையே சமரசம்  ஏற்பட்டு சேர்ந்துவாழ முடிவெடுத்தால் மீண்டும் வாழவும் முத்தலாக் மசோதா வகை செய்கிறது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இந்த மசோதாவின் படி பெண்ணுக்கே கிடைக்கிறது.