முத்தலாக் சட்டம் கொண்டுவரப்படும்: பிரதமர் மோடி உறுதி

 

முத்தலாக் சட்டம் கொண்டுவரப்படும்: பிரதமர் மோடி உறுதி

எதிர்க்கட்சிகளின் தடைகளையும் மீறி முத்தலாக் சட்டம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி உறுதியாக கூறியுள்ளார்.

காந்திநகர்: எதிர்க்கட்சிகளின் தடைகளையும் மீறி முத்தலாக் சட்டம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி உறுதியாக கூறியுள்ளார்.

பாஜக மகளிர் அணியின் 5-வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், நாட்டு மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முந்தைய அரசுகள் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் உள்பட எதுவும் செய்யவில்லை. அவர்கள் வாக்குறுதி மட்டுமே அளித்தனர்.

கடந்த 60, 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க தவறிவிட்டனர். சமூக சீர்திருத்தம் மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஆகியவைகளுக்கு முந்தைய அரசுகள் உரிய நேரத்துக்காக காத்திருந்தன.ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் சமூகத்தின் பார்வை பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கு நல்ல மாற்றத்தை நோக்கி செல்கிறது. முதல்முறையாக அரசின் முக்கிய திட்டங்கள் பெண்களை சார்ந்தே உள்ளது

கடும் எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தடைகள் இருந்தபோதிலும், அரசு முத்தலாக் சட்டத்தை கொண்டுவருவதில் உறுதியாக உள்ளது. இதன்மூலம் இஸ்லாமிய பெண்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்ல, இஸ்லாமிய பெண்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்கு அவர்களுடன் ஆண்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற பிரிவை நீக்கியுள்ளோம் என்றார்.