முத்தம் குடுக்க மாட்டேன்; கண்டிஷன் போட்ட ஹீரோயினை ஒரம்கட்டிய இயக்குநர்!

 

முத்தம் குடுக்க மாட்டேன்; கண்டிஷன் போட்ட ஹீரோயினை ஒரம்கட்டிய இயக்குநர்!

இயக்குநர், தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக, அதிகபட்ச படங்களை கைவசம் வைத்திருப்பவர் உச்ச நடிகை.

இயக்குநர், தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக, அதிகபட்ச படங்களை கைவசம் வைத்திருப்பவர் உச்ச நடிகை.

உலக நடிகர் ஒருவர் நடிக்கும் படத்தில் உச்ச நடிகையை நடிக்க வைக்க படக்குழு நீண்ட நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இந்த படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரின் முந்தைய படங்களை மனதில் வைத்துக் கொண்டு, உச்ச நடிகை ஸ்ட்ரிக்ட்டான சில கண்டிஷன்களை போட்டுள்ளார்.

இந்திய சினிமாவில் சிறந்த நடிகர் மற்றும் இயக்குநருடன் பணியாற்ற ஏராளமான நடிகைகள் காத்திக்கிடக்கும் நிலையில், உச்ச நடிகை மிகவும் தெளிவாக தனது கண்டிஷன்களை விளக்கியுள்ளார். முத்ததுக்கு பேர் போன நடிகருடன் முத்தக் காட்சியில் நடிக்கவே மாட்டேன், கொடுத்த கால்ஷீட்டில் மட்டுமே நடிப்பேன், கூடுதலாகவோ, இந்த படத்துக்காக மற்ற படங்களை அட்ஜஸ்ட் செய்யவோ மாட்டேன் என கராராக கூறிவிட்டாராம்.

நடிகரும் சரி, இயக்குநரும் சரி இழுவைக்கு பேர் போனவர்கள் என்பதால் எவ்வளவு உச்ச நடிகையாக இருந்தால் என்ன, இவர் நம்ம படத்துக்கு செட் ஆகமாட்டார் என ஹீரோயினையே மாற்றிவிட்டனராம். புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை இதற்கு செட்டாவாரா என்று பார்த்தால், அடித்தது ஜாக்பாட் என்று க்ரீன் சிக்னல் காட்டிவிட்டாராம்.  

கோடம்பாக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த உச்ச நடிகையின் ரசிகர்கள் தற்போது ஏமாந்து போய்விட்டனர்.