‘முதுமை உடலுக்குத்தான்’.. திமுக பேரணியில் கலந்து கொண்ட முதியவரை கவுரவ படுத்திய மு.க ஸ்டாலின்

 

‘முதுமை உடலுக்குத்தான்’.. திமுக பேரணியில் கலந்து கொண்ட முதியவரை கவுரவ படுத்திய மு.க ஸ்டாலின்

அந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டாலும், அதில் கலந்து கொண்ட 85 வயது முதியவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

குடியரசு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டாலும், அதில் கலந்து கொண்ட 85 வயது முதியவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர், தான் ஒசசூரில் இருந்து வருவதாகவும்,திமுகவுக்காகத் தான் உயிரையே கொடுப்பேன் என்றும் கூறினார். வயது முதிர்வைப் பொருட்படுத்தாமல், அவர் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, அவரை அனைவரும் பாராட்டினர். 

ttn

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அந்த முதியவர் நாராயணப்பாவை, சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து சால்வை போர்த்தி கவுரவப்படுத்தி நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார். அதன் பின்னர், நெடுநேரம் அவரிடம் கலந்துரையாடினார்.

ttn

இது குறித்து மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில்,” முதுமை உடலுக்குத்தான், உள்ளம் என்றும் இளமையுடன் இயக்கத்திற்காக இயங்கும் எனும் வகையில், #CAA எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரின் 84வயது பெரியவர் நாராயணப்பாவிற்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தேன். அவரது கைகளைப் பற்றிய போது, கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு!” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

ttmn

அதே போல, உதயநிதி ஸ்டாலினும் முதியவரைச் சந்தித்து ஆசி பெற்றார். உதயநிதி ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு வரமாட்டேன் என்று கூறியிருந்தார். அதனைப் பற்றி பேசிய அந்த முதியவர், ‘மேயர் பதவிக்கு நீங்கள் வரும் போது நான் தான் உங்களுக்கு உதவியாளராக இருப்பேன். மேயர் பதவிக்கெல்லாம் வர மாட்டேன்னு சொல்லாதீங்க’ என்று என்று செல்லமாகக் கோபப்பட்டு உதயநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டார்.