முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! – சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு

 

முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! – சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக் கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கு வருகிற 22ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பல்கலைக் கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான 2020-21ம் கல்வியாண்டு சேர்க்கை unom.ac.in என்ற பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் 22-5-2020 முதல் விண்ணப்பிக்கலாம்” என்று கூறியுள்ளார்.