முதுகுத் தண்டை நேராக்கும் ஊஞ்சல் விளையாட்டு

 

முதுகுத் தண்டை நேராக்கும் ஊஞ்சல் விளையாட்டு

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் கயிற்றில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தார்கள்.  அதன் பின்னர் படிப்படியாக ஊஞ்சல் கட்டி ஆடுகின்ற பழக்கம் குறைந்து விட்டது. மரங்களையேத் தேடிக் கொண்டிருக்கும் காலத்தில், ஊஞ்சலுக்கு எங்கே போவது என்கிற நிலை தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் கயிற்றில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தார்கள்.  அதன் பின்னர் படிப்படியாக ஊஞ்சல் கட்டி ஆடுகின்ற பழக்கம் குறைந்து விட்டது. மரங்களையேத் தேடிக் கொண்டிருக்கும் காலத்தில், ஊஞ்சலுக்கு எங்கே போவது என்கிற நிலை தான்.
இப்பொழுதும், வீட்டில் பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் முற்றம் அமைக்கும் பொழுதே, ஊஞ்சல் கட்டுவதற்கென்று பழங்காலத்தில் வளைவான கம்பிகளையும் சேர்த்து வைத்தார்கள். 

swing game

இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால் தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகின்றது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.  திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப் படுகிறது. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து ஊஞ்சலில் அமர்ந்து ஆடுபவரின் மூளை சுறுசுறுப்படைகிறது.

swing game

கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போனவர்கள், இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று, அதனால் ஏற்படும் கழுத்துவலியையும் குணமாக்கும்.
தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இயற்கையான சூழலில் ஊஞ்சலில் ஆடுபவர்களுக்கு, இதயநோய்கள் வராது என்கிறது அறிவியல். ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும். உணவை சாப்பிட்டவுடன், அரை மணி நேரத்திற்கு மிதமான வேகத்தில் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது செரிமானத்திற்கு நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கோபமாக இருக்கும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடினால் கோபம் தணியும்.

swing game

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது. இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.  வாஸ்து படிப் பார்த்தாலும், வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது என்கிறார்கள்.