முதியோர் இல்லங்களில் தவிக்கும் தாலாட்டும் தாரகைகள்…

 

முதியோர் இல்லங்களில் தவிக்கும் தாலாட்டும் தாரகைகள்…

தன்னலம் கருதா தாயன்பு ஒன்றே வாழ்க்கையில் நிரந்தரம் என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயன்பின் மகத்துவத்தை உணராத சிலர் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலமும் இங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

தன்னலம் கருதா தாயன்பு ஒன்றே வாழ்க்கையில் நிரந்தரம் என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயன்பின் மகத்துவத்தை உணராத சிலர் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலமும் இங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

பிறப்பதற்கும், படிப்பதற்கும், வளர்வதற்கும், வாழ்வதற்கும் தாய் தேவை என நினைக்கும் இளைய தலைமுறையினர்களுக்கு அவரவர் தாயாகும்போது அன்னை தேவை என்பதை உணருவதில்லை…  சிறு வயதில் அம்மா… அம்மா… முந்தானையை பிடித்துக்கொள்ளும் ஆண் குழந்தைகள் தான் பெரும்பாலும் இதுபோன்ற தவறுகளை செய்துவிடுகின்றன.  ஆணோ, பெண்ணோ செய்யும் தவறுகளையெல்லாம் செய்துவிட்டு பின்பு அன்னையர் தினத்தன்று அன்னையை நினைத்து வருத்தப்படுவது போல் சமூக வலைதளங்களில் ஒரு ஸ்டேட்ஸை பதிவு செய்துவிட்டு நகர்வதுண்டு.  

mothers day

உலகெங்கும் அன்னையர் தினம் கொண்டாடும் நிலையில், கூடற்ற பறவையாய் தன் வனத்தை தொலைத்த துக்கம் தாளாது, தவிக்கும் முதியவர்கள், முதியோர் இல்லங்களில் அனாதையாய், பாசத்துடன் வளர்த்த மகனை பார்க்க முடியாமல், ரத்த வாரிசை பார்க்க முடியாத சோகத்தில் குழந்தையைப் போல கண்ணீர் சிந்துகின்றனர். 

நவீன வாழ்க்கை முறை குடும்ப உறவுகளை சிதைத்து அன்னையர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டது. இந்த அவலம் காலப்போக்கில் மாறிவிடும் என்றால் வளர்ந்து வருகிறது. இப்படி முதியோர் இல்லங்களில் வாழும் அன்னைகளிடம் சென்று அன்னையர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதைப்பற்றி தங்களின் கருத்து என்னவென்று கேட்டால், அங்கிருக்கும் ஒரு அம்மா, சொன்ன வார்த்தை…. கருவில் சுமந்த என்னை என் பிள்ளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டான்… அவனுடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளே இதற்கெல்லாம் காரணம்… நான் கொடுத்துவைத்தது அவளோதான் என மகன்களை விட்டுக்கொடுக்காமல் பேசுகின்றனர். 

mothers

உணவு, உடை, இருப்பிடம் என அடிப்படை தேவைகள் முதியோர் இல்லத்தில் கிடைத்தாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி அன்பு என்ற ஈடிணையற்ற ஒன்று முதியோர் இல்லங்களில் உள்ள அன்னைகளுக்கு கிடைக்குதா என்றால் அது கேள்விக்குறியே…. இனிவரும் சந்ததியாவது தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் அனாதைகளாக விடாமல் தங்கள் அரவணைப்பில் பாசத்துடன் வாழ வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு அன்னையர் தினத்தின் கருப்பொருளாகவுள்ளது.