முதியவரை தி.மு.க-வினர் அடித்ததாக பொய் பிரசாரம்… கமிஷனரிடம் புகார் செய்த தி.மு.க!

 

முதியவரை தி.மு.க-வினர் அடித்ததாக பொய் பிரசாரம்… கமிஷனரிடம் புகார் செய்த தி.மு.க!

சென்னை நங்கநல்லூரில் 79 வயதான முதியவர் ஒருவர் தி.மு.க, தி.க சிந்தனையாளரால் தாக்கப்பட்டார் என்று ஒரு பதிவு வெளியானது. அதை ஒவ்வொருவராக மாற்றி தி.மு.க நிர்வாகி தாக்கினார் என்று பதிவிட்டு வருகின்றனர். கடைசியில் தி.மு.க தாக்கியது என்ற வகையில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

நங்கநல்லூரில் தி.மு.க-வினர் 79 வயதான முதியவரைத் தாக்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வதந்தியைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் 79 வயதான முதியவர் ஒருவர் தி.மு.க, தி.க சிந்தனையாளரால் தாக்கப்பட்டார் என்று ஒரு பதிவு வெளியானது. அதை ஒவ்வொருவராக மாற்றி தி.மு.க நிர்வாகி தாக்கினார் என்று பதிவிட்டு வருகின்றனர். கடைசியில் தி.மு.க தாக்கியது என்ற வகையில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

naganallur

இது குறித்து தி.மு.க தலைமைக் கழக வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “தி.மு.க சட்டத்துறையின் சார்பில் இந்த புகாரை அளிக்கிறேன். நங்கநல்லூரைச் சேர்ந்த ஹரிபிரசாத், முன்னாள் கவுன்சிலர் என்பவரின் தூண்டுதலின் பேரில், அதே நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பா ராகவன் என்பவர் “R.S.Bharathy hate Speech has showed it Colours” என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் தலைப்பிட்டு, கீழ்க்கண்ட ஒரு பொய்யான செய்தியினை பின்வருமாறு பதிவிட்டுள்ளார். அதில், “திமுகவினரால் தாக்கப்பட்ட 79 வயது முதியவர் நடராஜ ஐயர், நங்கநல்லூரில் உள்ள, ஸ்ரீசக்ரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஐசியூ வார்டில் உள்ளார். நடராஜ ஐயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நங்கநல்லூரில் வயதான பிராமணர் ஒருவர் திமுக ரவுடிகளால் தாக்கப்பட்டார். மார்ச்-7 நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 6 மணிக்கு நங்கநல்லூர், பாரதியார் இரண்டாவது தெற்கு தெருவில், பிரியம்ஸ் நிவாசினி பிளாட்ஸ் இரண்டாவது மாடியில் வசிக்கும், நடராஜ சௌதிகள் (ஸாமவேதி) (வயது-79) என்பவரை திமுகவை சேர்ந்த சொக்கலிங்கம் என்ற ரவுடி அசிங்கமாக திட்டி, நடராஜ சாஸ்த்ரிகளை தாக்கி உள்ளார். வயதான தம்பதிகளான அவர்களுக்கு யாரும் ஆதரவு இல்லை. நடராஜ ஐயருடைய மகன் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். நடராஜ ஐயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நங்கநல்லூரில் வசிக்கும் பிராமணர்கள் மற்றும் அனைத்து பிராமணர் சங்கங்களின் நிர்வாகிகள் தயவுசெய்து உடனடியாக சென்று பார்த்து உதவி செய்யவும்” என்று கூறியுள்ளார்.

 

 

இந்த பொய்யான செய்தியை, நங்கநல்லூரைச் சேர்ந்த ஹரிபிரசாத், முன்னாள் கவுன்சிலர் என்பவரின் தூண்டுதலின் பேரில் புஷ்பா ராகவன் பதிவிட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தபோது, நடராஜ அய்யருக்கும் – அவர் குடியிருந்து வரும் வீட்டு உரிமையாளருக்கும் வாடகை பாக்கி தகராறு காரணமாக அடிதடி சண்டை ஏற்பட்டு, அப்புகாரின் மீது பழவந்தாங்கல் காவல் நிலையத்தில், முதல் தகவல் அறிக்கை எண்.39/2020, என்பதன் அடிப்படையில் வழக்கு பிரிவு 294(பி), 323 இ.த.ச.-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறாக, பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் – சமய, சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், மக்களிடையே ஒரு கலவரத்தை தூண்டிட முன்னாள் கவுன்சிலர் ஹரிபிரசாத் தூண்டுதலின் பேரில், புஷ்பா ராகவன் பொய்யான செய்தியை பதிவிட்டு வருகிறார்.
எனவே, மேற்கூறிய நங்கநல்லூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஹரிபிரசாத் மற்றும் புஷ்பா ராகவன் ஆகியோர் மீது பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துதல் – சமய, சமூக உணர்வுகளை புண்படுத்தி, மக்களிடையே பெருங்கலவரம் உருவாக்கிட முயற்சித்தல், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி, மற்றும் எங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான பிரச்சாரத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்துதல் மற்றும் இதர பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.