முதியவரை ஓட ஓட விரட்டி அடித்து கொன்ற அஸ்ஸாம் இளைஞர்: விசாரணையில் வெளியான உண்மை!

 

முதியவரை ஓட ஓட விரட்டி அடித்து கொன்ற அஸ்ஸாம் இளைஞர்: விசாரணையில் வெளியான உண்மை!

அதில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முதியவர் கிருஷ்ணமூர்த்தியை கல்லால் அடித்துக் கொன்றது தெரியவந்தது.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை வெள்ளாளர் தெருவின் சாலையோரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி என்ற 60 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணமூர்த்தி அடிபட்டு கிடந்த இடத்திற்கு அருகில் இருந்த கல்லை எடுத்து விசாரணை நடத்தினர். அந்த வழியாக செல்லும் டிம்பர் லாரியில் உள்ள கல்  முதியவர் மீது பட்டிருக்கலாம் என்று யூகிக்க போலீசார் வழக்கை விபத்து என பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார் .இதைதொடர்ந்து அப்பகுதியில் இருந்த  சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முதியவர் கிருஷ்ணமூர்த்தியை கல்லால் அடித்துக் கொன்றது தெரியவந்தது.

ttn

சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர்  அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரபிபில்  இஸ்லாம் என்பது தெரியவந்தது. இவர் வீட்டில் சண்டையிட்டுக் கொண்டு தனது நண்பர்களுடன் சென்னை வந்துள்ளார்.  சென்னையில் அவரது நண்பர்களுக்கு வேலை கிடைத்துவிட இவருக்கு வேலை கிடைக்காததால் சாலையோரத்தில் தங்கி பொழுதை கழித்துள்ளார் .இவர் அருகே தினமும் ஐந்து நாய்கள் படுத்து தூங்குவது வழக்கம். அப்படி சம்பவத்தன்று படுத்து தூங்கிய நாய்களை முதியவர் கல்லால் அடுத்ததாக தெரிகிறது

t

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாம் கிருஷ்ணமூர்த்தியை ஓட ஓட விரட்டி கல்லால் அடித்து வெறித்தனமாக கொன்றது விசாரணையில் கண்டுபிடிக்கபட்டது. இந்த வழக்கை விபத்திலிருந்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இஸ்லாமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.