முதியவரிடம் செல்போன் பறித்த சிறுவர்கள்: முகவரி கேட்பது போல் நூதன திருட்டு!

 

முதியவரிடம் செல்போன் பறித்த சிறுவர்கள்: முகவரி கேட்பது போல் நூதன திருட்டு!

சென்னை வளசரவாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயபாண்டியன் என்பவர், வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு சாலையில் நின்றிருந்தார். அப்போது ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் முகவரி கேட்பது அருகில் வந்து பேசியபடியே, முதியவரிடம் சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனால் சுதாரித்து கொண்ட ஜெயபாண்டியன் இருசக்கர வாகனத்தைப் பிடித்துக் கொண்டதால், சாலையில்  இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால்  அவரது  உடலில் காயங்கள் ஏற்பட்டன.

இது தொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, செல்போன் கொள்ளையர்கள் 3 பேரையும் தேடி வந்த போலீசார், மதுரவாயல் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படிக்கும் சக்திவேல், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிவா ஆகியோரைக்  கைது செய்து, செல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.