முதல் வாரத்தில்1,500 கோடியா?: வாயை பிளக்க வைக்கும் ‘2.0’ சீக்ரெட்!

 

முதல் வாரத்தில்1,500 கோடியா?: வாயை பிளக்க வைக்கும் ‘2.0’ சீக்ரெட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ திரைப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ திரைப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது.

கத்தி திரைப்படம் தொடங்கி பல வெற்றி படங்களை தயாரித்து லைகா நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் ’2.O’ ப்படத்தையும் தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில்பிரம்மாண்டம்என்ற வார்த்தையை தன் வசப்படுத்தியிருக்கும் இயக்குநர் ஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுமார் 2 வருடங்களாக உருவாகி வந்த இப்படத்திற்கு உலகம் முழுவதும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தென்னிந்திய சினிமாவில் வசூல் ரீதியாக இதுவரை இருந்த சாதனைகளை இந்த படம் முறியடிக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, இப்படத்தின் முதல் வார வசூல் மட்டும் ரூ.1500 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 1500 கோடியின் தோராயமான கணக்கு என்னவென்றால்..?

 

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த 2.O படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதாக தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்படுகிறது.

* 1,500 இருக்கைகள் கொண்ட பெரிய தியேட்டர்களும் உண்டு, 250 இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறிய தியேட்டர்களும் உள்ளது. 

* அதன்படி, ஒரு தியேட்டருக்கு சராசரியாக 350 இருக்கைகள் இருந்தாலும், 10000 திரையரங்குகளில் ஒரு ஷோவிற்கு 35 லட்சம் ஆடியன்ஸ்.

* ஒரு நாளைக்கு 5, 6 ஷோக்கள் கூட திரையிடப்படும், குறைந்தபட்சமாக 4 ஷோக்கள் என்றாலும், ஒரு நாளைக்கு மொத்தம் 1 கோடியே 40 லட்சம் ஆடியன்ஸ் படத்தை பார்ப்பார்கள். 

* GST உள்ளிட்ட வரிகள் ஏதும் இல்லாமல் ஒரு டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ.160. அதன்படி, ஒரு நாளைக்கு 1 கோடியே 40 லட்சம் ஆடியன்ஸ் என்றாலும், ரூ.224 கோடி வசூலாகிறது. அதையே 7 நாட்களுக்கு பார்த்தால், முதல் வார வசூல் ரூ.1568 கோடியை எட்டுகிறது.

2point0

* தமிழ்திரைத் துறையில் பெரிய நடிகர்களின் படத்துக்கு வணிக ரீதியாக 70% வரை தயாரிப்பாளருக்கு பங்குகள் கொடுக்கப்படும். அதன்படி, ஒரு நாள் வருவாய் ரூ.224 கோடியில் இருந்து 70% என்றால் ரூ.157 கோடி, இதுவே 7 நாட்களுக்கு கணக்கு செய்தால் முதல் வாரம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.1100 கோடி வருவாய் லைகா நிறுவனத்திற்கு கிடைக்கிறது.

* 7 நாட்களும் ஹவுஸ்ஃபுல் இல்லாமல், 75% இருக்கைகள் நிரம்பினால் கூட ரூ.770 கோடியும், 50% இருக்கைகள் நிரம்பினால் ரூ.560 கோடியும் வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது அனைத்தும் நமக்கு கிடைத்திருக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் நாம் தோராயமாக கணக்கு செய்தது. திரையரங்க வசூல் மட்டுமல்லாமல் சேட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் உள்ளிட்ட இதர வருமானம் என இதுவரை ‘2.0’ படத்தின் மொத்த பட்ஜெட்டான ரூ.550 கோடியை இப்போதே நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த தங்கல், பாகுபலி படங்களின் வசூல் சாதனையை ஒரே வாரத்தில் ‘2.0’ திரைப்படம் வசூலித்து வணிக ரீதியில் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.