முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த சாய் தன்ஷிகா

 

முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த சாய் தன்ஷிகா

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் படத்தில் தன்ஷிகா நாயகியாக இணைந்துள்ளார்.

முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த சாய் தன்ஷிகா

சென்னை: விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் படத்தில் தன்ஷிகா நாயகியாக இணைந்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்து வரும் படம் லாபம். இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிவரும் இந்த படத்தை விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும் , 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. 

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நடிகை சாய் தன்ஷிகா இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாம். இது குறித்து தன்ஷிகா கூறுகையில், ‘ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம் தான்.

விவசாயிகளின் வாழ்நிலையைப் பேசுவதோடு வெள்ளையர்கள் காலத்திலிருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாகப் படம் பேசும்’ என்று கூறியுள்ளார்.