முதல் முறையாக நாமினேஷனில் சிக்கினார் லாஸ்லியா

 

முதல் முறையாக நாமினேஷனில் சிக்கினார் லாஸ்லியா

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் ஆகியோர் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் எலிமிநேஷனில் ரேஷ்மா வெளியேறினார். 

இந்த நிலையில் வார முதல் நாள் என்பதால் நாமினேஷன் படலம் நடைபெறும். அந்த வகையில் இன்றைய நாமினேஷன் குறித்து புரோமோ வெளியாகியுள்ளது. அதில் முதல் ஆளாக சென்ற சரவணன் இந்த முறை லாஸ்லியா அன்னையரையும் அசிங்கம் செய்யும் விதமாக நடந்து கொண்டார் அதனால் அவரை நாமினேட் செய்வதாக அறிவித்தார். 

அவரை தொடர்ந்து வந்த ஷெரின் மற்றும் சாக்ஷி ஒன்றாக பேசி வைத்தது போல் லாஸ்லியாவை நாமினேட் செய்துள்ளான். ஆகையால் இதிலிருந்து இந்த வாரம் நாமினேஷனில் லாஸ்லியா சிக்கியுள்ளார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிய வந்துள்ளது.