முதல் முறையாக தனுஷ் பட நாயகியுடன் ஜோடி சேர்ந்த ஜெயம் ரவி

 

முதல் முறையாக தனுஷ் பட நாயகியுடன் ஜோடி சேர்ந்த ஜெயம் ரவி

சென்னை: நடிகை ஜெயம் ரவியின் 26வது பட கதாநாயகி யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் அடித்து வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதையொட்டி தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் ஹிட் அடித்ததால் ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாடினர். தற்போது இவர் தனது ரசிகர்களைக் கவரும் வகையில் படம் இருக்க வேண்டும் என்பதால் படத்தின் கதையை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறாராம். 

இந்த நிலையில் 25 படங்களை வெற்றிகரமாக நடித்துள்ள ஜெயம் ரவி தற்போது 26வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை  என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இதில் அவருக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

முதல் முறையாக இணைந்துள்ள இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி  எப்படி உள்ளது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். விரைவில் படத்தை பற்றிய மற்ற அப்டேட் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகை டாப்ஸி ஆடுகளம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.