முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிரபல தெலுங்கு பட நாயகி! வெளியானது அறிவிப்பு! 

 

முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிரபல தெலுங்கு பட நாயகி! வெளியானது அறிவிப்பு! 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 16வது படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 16வது படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள  மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. காமெடி படங்களுக்கு புகழ்பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும், நேற்று இன்று நாளை பட இயக்கநனரின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். 

 

இந்த நிலையில் இப்படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்து புகழ் பெற்ற, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை அனு இமானுவெல் இதில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.