முதல் முறையாக சர்வதேசப் பட விழாவுக்கு செல்கிறது ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்! எந்த படம் தெரியுமா?

 

முதல் முறையாக சர்வதேசப் பட விழாவுக்கு செல்கிறது ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்! எந்த படம் தெரியுமா?

நடிகர் ஜி.வி .பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

சென்னை: நடிகர் ஜி.வி .பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான படம் ‘சர்வம் தாளமயம்’. நெடுமுடிவேணு, அபர்ணா பாலமுரளி நெடுமுடி வேணு, வினீத் உள்படப் பலர் நடித்துள்ளனர். இப்படம்  ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை மற்றும் ஹிட்டானது. 

இந்த நிலையில் தற்போது இந்த படம்  2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது. இந்த தகவலை ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சி 15 முதல் ஜூன் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

மேலும் இதே திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, தல்கார் சல்மான் உள்பட பலர் நடித்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படமும் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.