முதல் முறையாகத் தல அஜித்க்கு மகளாக நடிக்கும் ஜான்வி கபூர்? 

 

முதல் முறையாகத் தல அஜித்க்கு மகளாக நடிக்கும் ஜான்வி கபூர்? 

தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் 8ம் தேதி வெளியாகவுள்ளது. 
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப்படம்  ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.  இதில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து தல 60வது படத்தையும் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளதாகச் சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். அதுமட்டுமின்றி இதில் தல அஜித் வயதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் இளம் நடிகை ஒருவர் அவருக்கு மகளாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் மகள் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவிக்கு தனது மகளைத் தமிழில் நடிக்க வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையை தற்போது அஜித் தன் படத்தின் மூலம் நிறைவேற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.