முதல் தொடரிலேயே மிகப்பெரும் சாதனை படைத்த ஜானி பாரிஸ்டோவ் !!

 

முதல் தொடரிலேயே மிகப்பெரும் சாதனை படைத்த ஜானி பாரிஸ்டோவ் !!

நடப்பு ஐ.பி.எல் தொடர் மூலம் ஐ.பி.எல் உலகிற்கு அறிமுகமான ஜானி பாரிஸ்டோவ் இந்த தொடரிலேயே மிகப்பெரும் சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்

நடப்பு ஐ.பி.எல் தொடர் மூலம் ஐ.பி.எல் உலகிற்கு அறிமுகமான ஜானி பாரிஸ்டோவ் இந்த தொடரிலேயே மிகப்பெரும் சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார். 

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் ரசிகர்களின் மிகப்பெரும் வரவேற்பிற்கு மத்தியில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஹைதராபாத் அணியின் மூலமாக ஐ.பி.எல் அரங்கில் கால் பதித்த அந்த அணியின் துவக்க வீரர் ஜானி பாரிஸ்டோவ், ஹைதராபாத் அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். 

Jonny Bairstow
ஒவ்வொரு போட்டியிலும் மாஸ் காட்டி வரும் பாரிஸ்டோவ், இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் மொத்தம் 445 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் அறிமுக சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Jonny Bairstow
இதற்கு முன்னதாக 2015ம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அந்த சீசனில் 439 ரன்கள் அடித்ததே அறிமுக போட்டியில் அடிக்கப்பட்ட அதிக ரன்னாக இருந்தது. அதை முறியடித்து தற்போது அறிமுக சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜானி பாரிஸ்டோ படைத்துள்ளார்.