முதல் டெஸ்ட் போட்டி! வங்காளதேசத்துக்கு எதிரான இந்திய அணி பந்து வீச்சு!

 

முதல் டெஸ்ட் போட்டி! வங்காளதேசத்துக்கு எதிரான இந்திய அணி பந்து வீச்சு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்காளதேச அணி, 20 ஓவர் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவின் இழந்தது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.  இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ind vs ban

இன்றைய போட்டியில் வங்காளதேசத்திற்கு முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ஹக், டாஸ் வென்றதுடன், முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்துள்ளார்.  துவக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாம், இம்ருல் கயீஸ் ஆகியோர் களமிறங்கினர். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கி உள்ளது.