முதல் டெஸ்ட் போட்டி தோல்வி…விராட் கோலி சொதப்பியதே காரணம் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

 

முதல் டெஸ்ட் போட்டி தோல்வி…விராட் கோலி சொதப்பியதே காரணம் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதற்கு விராட் கோலியே காரணம் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

வெல்லிங்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதற்கு விராட் கோலியே காரணம் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு இந்திய அணியை நியூசிலாந்து பழி தீர்த்தது. இந்த நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடி வருகின்றன.

ttn

அந்த வகையில், வெல்லிங்டனில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இதில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான தோல்வி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி இரு இன்னிங்ஸ்சிலும் விரைவில் அவுட் ஆனதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கோலி ரன்களை குவித்து இருந்தால், எதிரணியால் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போயிருக்கும். அதாவது நியூசிலாந்து அணி வீரர்கள் தங்களது திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறி இருப்பார்கள். ஆனால் யாரும் எதிர் தாக்குதல் நடத்தி போராடவில்லை. இந்த காரணங்களால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது” என்றார்.