முதல் டி20 போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது இந்திய அணி!

முதல் டி20 போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா முதலில் பந்துவீசுகிறது. 

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் முதல் கட்டமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. 

indvsnz

இதற்கான முதல் டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இரு தினங்களுக்கு முன்பே இந்தியா அணி நியூசிலாந்து சென்று, இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்திருக்கிறார்.

virat

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக துவக்க வீரர் ஷிகர் தவான் நியூசிலாந்து டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் துவக்க வீரர் பிரித்திவி ஷா சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

india

ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் (கீப்பர்), விராட் கோஹ்லி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாகூர், ஜஸ்பிரீத் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி.

நியூசிலாந்து வீரர்கள் பட்டியல்:

nz

மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சீஃபர்ட் (கீப்பர்), ரோஸ் டெய்லர், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, பிளேர் டிக்னர், ஹமிஷ் பென்னட்