முதல் கோனலா முற்றிலும் கோணலா? எடப்பாடிக்கு வந்த கெட்டப்பெயர்!

 

முதல் கோனலா முற்றிலும் கோணலா?  எடப்பாடிக்கு வந்த கெட்டப்பெயர்!

இந்தியாவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தக்காரில்64 kWh லித்தியம்-ஐயான் பாலிமர் பேட்டரி பயன்படுத்தபடுகிறது. இந்தியாவில் எட்டு ஆண்டுகளுக்கு இந்த பேட்டரிகளுக்கான வாரண்டி அளிக்கப்பட்டிருந்தாலும், கனடாவில் எரிந்துப்போன கார் வாங்கப்பட்டது ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை.

சென்னை ஹுண்டாய் கார் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட முற்றிலும் மின்சார பேட்டரிகளால் இயங்கக்கூடைய கோனா காரை கொடியசைத்து முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் துவக்கி வைத்தார்கள் அல்லவா? அதில் ஒரு சின்ன சிக்கல். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோனா கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. கார் எரிந்தது கெட்ட செய்தி என்றாலும், எடப்பாடிக்கு அதில் ஒரு நல்ல செய்தியும் உண்டு. கார் எரிந்தது கனடாவில். கனடாவில் கார் எரிந்தால், எடப்பாடியை ஏன்யா இழுக்குறீங்க என்றால், காரணம் உண்டு. அரசியல். கர்நாடகாவில் அணைகள் நிறைந்து மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டால், முதலமைச்சர் அதில் மைலேஜ் எடுத்துக்கொள்வதில்லையா, அதுபோலத்தான்.

Burnt Hyundai Kona

போகட்டும். கோனாவுக்கு வருவோம். இந்தியாவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தக்காரில்64 kWh லித்தியம்-ஐயான் பாலிமர் பேட்டரி பயன்படுத்தபடுகிறது. இந்தியாவில் எட்டு ஆண்டுகளுக்கு இந்த பேட்டரிகளுக்கான வாரண்டி அளிக்கப்பட்டிருந்தாலும், கனடாவில் எரிந்துப்போன கார் வாங்கப்பட்டது ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. கோனா எரிந்ததற்கு சார்ஜிங் பிரச்னையா அல்லது பேட்டரி வெப்ப அழுத்தமா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விசாரணை இருக்கட்டும், கனடாவில் எரிந்த கோனாவுக்கும், கோயம்பேடு கோனாவுக்கும் சம்பந்தப்படுத்திய இந்த ஆள் குறித்து என்.ஐ.ஏ. விசாரிக்கணும்னு நினைக்கிறீங்களா? மீ பாவம்!