முதல் கட்ட லாக்டவுனால் ரூ.8 லட்சம் கோடி வருவாயை இழந்த இந்திய பொருளாதாரம்…

 

முதல் கட்ட லாக்டவுனால் ரூ.8 லட்சம் கோடி வருவாயை இழந்த இந்திய பொருளாதாரம்…

முதல் கட்ட (21 நாள்) லாக்டவுனால் இந்திய பொருளாதாரம் சுமார் ரூ.7-.8 லட்சம் கோடி வருவாயை இழந்திருக்கும் என சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரச கடந்த மாதம் 25ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 21 நாட்கள் நாடு தழுவிய லாக்டவுனை செயல்படுத்தியது. நிறுவனங்கள், விமானம், பஸ் மற்றும் ரயில் உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. மேலும் மக்களும் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் இந்திய பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார சரிவு

21 நாள் முடக்கத்தால் இந்திய பொருளாதாரத்தில் ரூ.7-8 லட்சம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மற்றொரு ஆய்வு நிறுவனமான அக்யுட் ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் தனது அறிக்கையில், 21 நாள் லாக்டவுனில் தினந்தோறும் சுமார் ரூ.35 ஆயிரம் கோடிக்கு மேல் இந்திய பொருளாதாரத்தில் இழப்பு ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடைகள் அடைப்பு

லாக்டவுனால் டிரக்டர்கள் தினந்தோறும் ஒரு டிரக்குக்கு ரூ.2,200 வீதம் லாக்டவுனில் முதல் 15 நாட்களில் ரூ.35,200 கோடி வருவாயை இழந்துள்ளனர் என அனைத்து இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ரியல்எஸ்டேட் துறை ஒட்டு மொத்த அளவில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. சிறு, நடுத்த மற்றும் பெரிய என மொத்தம் 7 கோடி நிறுவனங்கள் மற்றும் 45 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்து வரும் சில்லரை வர்த்தக துறை மார்ச் மாதத்தின் இரண்டாவது பாதியில் சுமார் ரூ.2.25 லட்சம் கோடி வர்த்தகத்தை இழந்துள்ளதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது.