முதல் ஒருநாள் போட்டி… இந்தியா – விண்டீஸ் இன்று பலபரிச்சை!

முதல் ஒருநாள் போட்டி… இந்தியா – விண்டீஸ் இன்று பலபரிச்சை!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

ind vs wi

முதல் கட்டமாக, நடைபெற்று முடிந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இன்று துவங்கவிருக்கும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மதியம் 1.30 மணி அளவில் துவங்க இருக்கிறது. 

இந்திய அணியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பயிற்சியின் போது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறியுள்ளார். புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஷர்துல் தாக்கூர் உள்ளே எடுத்து வரப்பட்டு இருக்கிறார்.

ind vs wi

அதேபோல் டி20 போட்டிகளில் காயம் காரணமாக வெளியேறியிருந்த துவக்க வீரர் ஷிகர் தவான், இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால் ஒருநாள் தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார். தவானுக்கு பதிலாக டெஸ்ட் அணியில் துவக்க வீரராக ஜொலித்து வருகிற மயங்க் அகர்வால் மாற்று வீரராக உள்ளே எடுத்து வரப்பட்டு இருக்கிறார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாய் ஹோப் நல்ல பார்மில் இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக பந்துவீச்சில் காட்ரெல் நல்ல நிலையில் இருக்கிறார்.