முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி!

 

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி!

indvsausodi

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடருக்கான முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

India-vs-Australia-Aus-First-ODI

இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் இருவரும் சற்றே நிலைத்து ஆடி வந்தனர். தவான் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

பின்னர் வந்த கேப்டன் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். ரிஷப் பண்ட் இன்றைய போட்டியிலும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இவர் 28 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

India-vs-Australia-Aus-First-ODI

49.1 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

இதனையடுத்து, வான்கடே மைதானத்தில் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சு அனாயசமாக எதிர்கொண்டு துவம்சம் செய்தனர்.

இந்த ஜோடி துவக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசியது. ஆரம்பம் முதலே 6 ரன்களுக்கும் அதிகமான ரன்ரேட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த ஜோடியை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். 

India-vs-Australia-Aus-First-ODI

குல்தீப் யாதவ் ஒருசில ஓவர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை திணற அடித்தாலும், அவராலும் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தது.

டேவிட் வார்னர் 112 பந்துகளில் 128 ரன்களும், கேப்டன் ஆரோன் ஃபின்ச் 114 பந்துகளில் 110 ரன்கள் எடுத்திருந்தனர். ஒருநாள் அரங்கில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவுவது இதுவே ஐந்தாவது முறையாகும். கடைசியாக 2005 ஆம் ஆண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.