முதல் ஒருநாள் போட்டியில் 255 ரன்களுக்கு சுருண்டது இந்தியா!

 

முதல் ஒருநாள் போட்டியில் 255 ரன்களுக்கு சுருண்டது இந்தியா!

ஆஸி., அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 255 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.

இந்தியா வந்துள்ள ஆஸி., அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸி., அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் மற்றும் தவான் போட்டியை துவங்கினர். பொதுவாக ஆஸி., அணிக்கு எதிராக நன்கு ஆடும் ரோகித், இம்முறை 10 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். 

todays t20

பின்னர், ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் தவான் இருவரும் நங்கூரம் போல நிலைத்து ஆடினர். இதில் பவுண்டரிகளாக அடித்து ஆடிவந்த தவான் அரைசதம் கண்டார். அதேநேரம், ஆஸி., அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களையும் அடித்து சாதனை பட்டியலில் இடம்பெற்றார்.

இவர் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த கேஎல் ராகுல் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அடுத்து வந்த, கோஹ்லி 16 ரன்களுக்கும் ஷ்ரேயாஸ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா சற்று தடுமாற்றம் கண்டது.

 

164/5 என இந்தியா திணறிய நிலையில், ஜடேஜா மற்றும் பண்ட் இருவரும் சிறிது நேரம் விக்கெட் இழக்காமல் ரன் சேர்த்தனர். ஜடேஜா திடீரென எதிர்பாராத வகையில் 25 ரன்களுக்கு வெளியேறினார். ரிஷாப் பண்ட் 28 ரன்களுக்கும் வெளியேற, 250 ரன்கள் தோடுவதே கடினம் என இருந்தது.

தாக்கூர் (13), சமி (10) மற்றும் குல்தீப் (17) மூவரும் கீழ் வரிசையில் ஒரு சில பவுண்டரிகளை அடிக்க, இந்தியா 250 ரன்களை கடந்தது. இறுதியாக, இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது.

ஆஸி., அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்சன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.