முதல்வர் வீட்டு நாய் இறந்ததற்கு கால்நடை மருத்துவர் மீது கிரிமினல் வழக்கு- வறுத்தெடுக்கும் தெலங்கானா எதிர்க்கட்சிகள்

 

முதல்வர் வீட்டு நாய் இறந்ததற்கு கால்நடை மருத்துவர் மீது கிரிமினல் வழக்கு- வறுத்தெடுக்கும் தெலங்கானா எதிர்க்கட்சிகள்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வீட்டு நாய் இறந்ததற்கு கால்நடை மருத்துவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நெட்டின்சன்கள் கடுமையாக கண்டனம் மற்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார். அதில் ஹஸ்கி என்ற 11 மாத நாயும் ஒன்று. கடந்த புதன்கிழமையன்று அந்த கால்நடை மருத்துவர் ஊசி போட்டுள்ளார். அதன் பிறகு அந்த நாய் இறந்து விட்டது. இதனையடுத்து சந்திரசேகர் ராவ் வீட்டில் நாய்களை கவனித்து வரும் ஆசிப் அலி கான் ஊசி போட்ட கால்நடை மருத்துவர் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

நாய்க் குட்டி

முதல்வர் வீட்டு புகார் என்பதால், சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவர் மீது கிரிமினல் அலட்சியம் வழக்கை போலீசார் உடனடியாக பதிவு செய்தனர். மேலும் விசாரணையை தொடங்கினர். தற்போது இந்த விவகாரம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 

பா.ஜ.

தெலங்கானா பா.ஜ. செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் இது குறித்து கூறுகையில், கே.சி.ஆரின் அரசாங்கத்தின் கிரிமினல் அலட்சியத்தால் தெலங்கானாவில் நடந்து வரும் டெங்கு இறப்புகளில் இது ஒரு கொடூரமான நகைச்சுவை. நாய்க்கு காட்டிய அன்பில் பாதியை முதல்வர் மக்களிடம் காட்டினால் கூட  டெங்குவால் ஏராளமான ஏழை குழந்தைகள் இறக்காது என தெரிவித்தார்.