முதல்வர் வீட்டுக்கு காவலில் இருந்த பெண் காவலருக்கு கொரோனாவா?.. காவல்துறை விளக்கம்

 

முதல்வர் வீட்டுக்கு காவலில் இருந்த பெண் காவலருக்கு கொரோனாவா?.. காவல்துறை விளக்கம்

எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை நம் நாட்டில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,391 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,694ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  4,829 ஆக அதிகரித்துள்ளது. 

ttn

இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனால் முதல்வருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்றெல்லாம் கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் முதல்வர் பழனிசாமியின் வீட்டின் அருகில் கிரீன்வேஸ் சாலையில் பணியில் இருந்து பெண் காவலருக்கு கொரோனா இல்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

ttn

பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை என்றும் அவர் முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அவர் 30 ஆம் தேதி வரை கிரீன்வேஸ் சாலையில் பணியாற்றி வந்தார் என்றும் அதன் பிறகு அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி ஆனதாகவும் தெரிவித்துள்ளது.