முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை

 

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களா தொடர்பாக நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் முறையிட்டிருந்தார். ஆனால், அந்த புகார் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையை 10,000-க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று முற்றுகையிட முயன்றனர். சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் ஜெ. அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சுதர்சனம் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் முழக்கங்கள் எழுப்பினர். அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.